Kataragama Temple - | ROUNDS TUBE - கதிர்காமம் பெரிய கோயில் - Sri Lanka





Dharshans on Sella Kataragama Lord Manicka Vinayagar and Lord Muruga, Buddha and other Deities inside and outside of the Kataragama Big Temple, Sri Lanka.

The photos depicting the places here shown are worth to visit with family and kids.
Please click the subscribe button as free to my channel ROUNDS TUBE for getting videos periodically.

सेलागरामा बड़ा मंदिर, श्रीलंका के अंदर और बाहर सेल्टा कतारागामा भगवान मनिका विनयगर और भगवान मुरुगा, बुद्ध और अन्य देवताओं पर धरना।

यहां दिखाए गए स्थानों को दर्शाने वाली तस्वीरें परिवार और बच्चों के साथ घूमने लायक हैं।

समय-समय पर वीडियो प्राप्त करने के लिए कृपया मेरे चैनल #ROUNDSTUBE पर निःशुल्क सदस्यता बटन पर क्लिक करें।

இலங்கையில் பிரசித்திபெற்ற முருகன் திருத்தலமான கதிர்காமத்திற்கு அண்மையில் செல்லக் கதிர்காமம்: பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இது கதிர்காமம் தலத்திருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இந்த ஊர் யானைக் காட்டின் நடுவே காட்சி தருகிறது. இங்கே திருவிழா காலங்களின்றி வேறு நாட்ளில் மக்கள் போக்குவரத்து கிடையாது. இங்கே மாணிக்க கங்கை தெள்ளத்தெளிவாய் ஓடி வளப்படுத்துகின்றது. பக்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடி செல்லக் கதிர் காமத்திலுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு பின் ஏழுமலையானைத் தரிசிக்க கதிரமலையேறும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
கதிர்காமம் கோயில்: இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது, தமிழர்கள், சிங்களவர், சோனகர், மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. வரலாறு: கதிர்காமக் கந்தனின் பெயர் தமிழ் சமசுகிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும்.
கோயில் அமைப்பு: ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில் உள்ளது.
கருவறையின் சிறப்பு: ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது. வருடாந்த பெருவிழா: ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டுவருகின்றன. அருணகிரிநாதர் இத்தலத்தினை வணங்கி வழிபட்டு 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைப் பாடியுள்ளார்.
இங்கே காட்டப்பட்டுள்ள இடங்களை சித்தரிக்கும் புகைப்படங்கள் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் பார்வையிடத்தக்கவை.
அவ்வப்போது வீடியோக்களைப் பெறுவதற்கு எனது சேனலுக்கு இலவசமாக சந்தா பொத்தானை அழுத்தவும்.

Comments

Popular posts from this blog

#PATTAYA #FloatingMarket, #THAILAND | #பட்டாயா #மிதக்கும்சந்தை, #தாய்லா...

4K- Arthanareeswar temple Tiruchengode அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங...

Happy Valentine's Day 14th February - இனிய காதலர் தினம் 14 பிப்ரவரி | RO...